Sunday 27 March 2016

இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த

கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான ஈமெயில் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் லேப்டாப்பில் இணைய இணைப்பு இருக்காது அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது. ஆப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மெயில்களை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்பலாம் மற்றும் ஆன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலே செய்யலாம். இதற்க்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.
  • இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.
  • இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow Offline Mail என்பதை தேர்வு செய்யவும்.

  • இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் ஈமெயில் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் ஆப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.
  • அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் ஈமெயில் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து மெயில்களும் காட்டும்.
  • இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மெயில்களும் காட்டும் அந்த மெயிலுக்கு நீங்கள் Reply போடலாம், அல்லது அந்த மெயிலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மெயிலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.
  • மற்றும் ஆன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  • மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது கீழே பாருங்கள்.
  • இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.

கணினி வேகமாக துவங்க

நம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…
வழிமுறைகள்:
1. நோட்பேட் (Notepad) திறந்து, “del c:\windows\prefetch\ntosboot-*.* /q” (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் “ntosboot.bat” – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், “Run…” செலக்ட் பண்ணுங்க, “gpedit.msc”-னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப “Computer Configuration” – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள “Windows Settings” டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, “Shutdown” – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் “add”, “Browse”-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் “OK”, “Apply” & “OK”,
6. திரும்பவும் “Run…” வந்து, “devmgmt.msc” தட்டச்சு செய்யுங்க.
7. டபுள் கிளிக் “IDE ATA/ATAPI controllers”.
8. “Primary IDE Channel” – ல, Right click பண்ணி, “Properties” செலக்ட் பண்ணுங்க.
9. “Advanced Settings” tab கிளிக் பண்ணி, ‘none’ கொடுங்க.
10. “Secondary IDE channel”, Right click பண்ணி “Properties” போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி “OK” கொடுங்க.
11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க

Saturday 26 March 2016

கணினியின் திரையில் தோன்றும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டுமா?

தங்களின் கணினியின் திரையில் தோன்றும் காட்சிகளை ஓர் அழகிய முழு நில வீடியோவாக பெற்றால் நன்றாக இருக்கும் தானே நண்பர்களே! அதுவும் இலவச மென்பொருள் ஒன்றை பயன்படுத்தி.


இதன் மூலம் இனி தாங்கள் ஏதேனும் தகவல்களை அதாவது தொடர் நிகழ்வு தகவல்களையோ அல்லது U-TUBE போன்ற வீடியோகளை பதிவிறக்க முடியாமல் இருக்கும் நேரத்தில் இந்த மென்பொருளை பயன்படுத்தி எளிமையான முறையில் அவற்றை தங்களின் கணினியில் ரேக்கார்ட் செய்து கொள்ளலாம். மேலும் சிறப்பாக தாங்கள் ஏதேனும் வீடியோ மூலம் சில செய்திகளையோ அல்லது கணினி சார்ந்த பாடங்களையும் இதில் பதிந்துகொள்ளலாம். இதனை பயன்படுத்துவது மிக எளிமை. RECORD என்னும் சிகப்பு கலர் பட்டனை அழுத்துவதன் மூலம் தங்களின் திரை காட்சிகளை படமாக்க படுகின்றன். அந்த செயலை நிறுத்த STOP என்னும் பட்டனை அழுத்துவதன் மூலம் மேற்கொள்ளலாம்.

இந்த மென்பொருளின் பெயர் DEBUT VIDEO CAPTUREஇரண்டு முறையில் இந்த மென்பொருள் கிடைக்கிறது. ஒன்று இலவசம் மற்றொன்று கட்டணம் செலுத்தி பெறுவது. இலவச மென்பொருளில் தாங்கள் தங்களின் ரேக்கார்ட் செய்ய பட்ட வீடியோவை தான் சேவ் செய்ய முடியும். இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. பிறகு Any Video Convertor Freeமென்பொருளை கொண்டு, தாங்கள் வேறு வகை வீடியோவாக Convertor  கொள்ளலாம். Any Video Convertor Free பற்றி காண கிளிக் செய்யவும் இங்கு.

இந்த வீடியோவை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்.
Download This Software
இரத்த தானம் பற்றிய தகவல் அறிய

Any one is Require for Blood Use this website.

http://www.friends2support.org/index.aspx

Monday 21 March 2016

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?


நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.

C     - Common
O     - Oriented
M    - Machine
P     - Particularly
U     - Used for
T     - Trade
E     - Education and
R     - Research

COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research